

ரமலான் மாத நோன்பு அம்மாதம் முழுமையும், முப்பது நாட்கள் தொடர்ச்சியாகப் பகற்பொழுது முழுவதும் உண்ணாமலும் ஒரு சொட்டு நீரையும் பருகாமலும் முஸ்லிம்கள் நோன்பு நோற்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
மனக் கட்டுப்பாட்டுடன் அளவுக்கதிகமான பொறுமையைப் பெறும் பயிற்சிக்களமாகவும் ரமலான் நோன்பு அமைகிறது. இந்த ஆண்டின் ரமலான் நோன்பு இன்று முதல் தொடங்கியதாக தலைமை காஜி அறிவித்துள்ளார். வானில் பிறை நிலவு இன்று(மார்ச் .11) மாலை தென்பட்டுள்ளதாகவும், இதனையடுத்து, நாளை(மார்ச் .12) முதல், ரமலான் நோன்பு கடைபிடிக்கப்பட உள்ளதாக தலைமை காஜி அறிவித்துள்ளார்.
இதையொட்டி, நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி ரமலான் வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது, அனைவருக்கும் ஆசீர்வதிக்கப்பட்ட ரமலான் வாழ்த்துக்கள். இந்த புனித மாதம் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியையும், நல்ல ஆரோக்கியத்தையும், செழிப்பையும் கொண்டு வரட்டும் என்று வாழ்த்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.