அசாமிற்கு சிஏஏ தேவையற்றது: ஹிமந்தா

குடியுரிமை கோருபவர்கள் 2014ஆம் ஆண்டுக்கு முன் மாநிலத்தில் நுழைந்ததற்கான ஆதாரத்தை அளிக்க வேண்டும்.
அசாமிற்கு சிஏஏ தேவையற்றது: ஹிமந்தா

அசாமில் குடியுரிமை திருத்தச் சட்டம் தேவையற்றது என்று முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 இன் கீழ இந்தியக் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்களுக்கான வலைத்தளத்தை உள்துறை அமைச்சகம் செவ்வாயன்று அறிமுகப்படுத்தியது.

இந்த நிலையில் அசாமில் சிஏஏ தேவையற்றது. இந்த போர்ட்டலில் குறைந்த எண்ணிக்கையிலான விண்ணப்பங்கள் மட்டுமே வந்துள்ளதாகவும் செய்தியாளர்களுடன் சந்திப்பில் தெரிவித்தார்.

குடியுரிமை கோருபவர்கள் 2014ஆம் ஆண்டுக்கு முன் மாநிலத்தில் நுழைந்ததற்கான ஆதாரத்தை அளிக்க வேண்டும். இது அசாமில் கடைப்பிடிக்கப்படுகிறது.

என்ஆர்சியில் விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அனைத்து தரவும் இணையத்தில் கிடைக்கும், எதையும் மறைக்க முடியாது. இந்தத் தகவல்கள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். குடியுரிமை மத்திய அரசால் வழங்கப்படும் என்றும் அது மாநிலப் பாடம் அல்ல.

"உணர்ச்சியுடன் அல்ல, பகுத்தறிவுடன் செயல்படுவோம்"

அசாமில் உள்ள 14 மக்களவைத் தொகுதிகளில் 13 இடங்களில் பாஜக வெற்றி பெறும் என்றும் முதல்வர் உறுதியளித்தார்.

மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்பார் என்று சர்மா கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com