தேனுக்கான குறைந்தபட்ச ஏற்றுமதி விலை டன் ஒன்றுக்கு 2,000 அமெரிக்க டாலராக நிர்ணயம்!

இயற்கை தேனின் குறைந்தபட்ச ஏற்றுமதி விலை ரூ.2,000 டாலர் நிர்ணயம்!
தேனுக்கான குறைந்தபட்ச ஏற்றுமதி விலை டன் ஒன்றுக்கு 2,000 அமெரிக்க டாலராக நிர்ணயம்!
Published on
Updated on
1 min read

புதுதில்லி: இயற்கை தேனுக்கு டிசம்பர் வரை டன் ஒன்றுக்கு 2,000 டாலர் ஏற்றுமதி விலையாக மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. இந்த அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வருகிறது என்று தெரிவித்துள்ளது.

அதே வேளையில், இந்த குறைந்தபட்ச ஏற்றுமதி விலை மதிப்பை விட குறைவான ஏற்றுமதி அனுமதிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இயற்கை தேன் ஏற்றுமதி இலவசம் என்ற நிலையில், குறைந்தபட்ச ஏற்றுமதி விலை ஒரு மெட்ரிக் டன்னுக்கு 2,000 அமெரிக்க டாலர் என்று டிசம்பர் 31, 2024 வரை அல்லது உத்தரவுகள் வரும் வரை என்று வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான காலகட்டத்தில் இயற்கை தேன் ஏற்றுமதி 15.321 கோடி டாலராக இருந்தது. இது 2022-23ல் 20.3 கோடி அமெரிக்க டாலராக இருந்தது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகியவை முக்கிய ஏற்றுமதி நாடுகளாக உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com