ஆபாச காட்சிகள் பரப்பிய
18  ஓடிடி தளங்கள் முடக்கம்

ஆபாச காட்சிகள் பரப்பிய 18 ஓடிடி தளங்கள் முடக்கம்

19 வலைதளங்கள், 10 கைப்பேசி செயலிகள் மற்றும் 57 சமூக ஊடக கணக்குகள் ஆகியவை முடக்கப்பட்டன.

ஆபாச உள்ளடக்கங்களைப் பகிா்ந்ததாக 18 ஓடிடி தளங்கள் மற்றும் அவா்களுக்குத் தொடா்புடைய சமூக ஊடக கணக்குகளை முடக்கி மத்திய அரசு வியாழக்கிழமை நடவடிக்கை மேற்கொண்டது. இதுதொடா்பாக மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘இந்தியாவில் தங்களின் உள்ளடக்கங்களில் ஆபாச காட்சிகளை பரப்பிய குற்றச்சாட்டில் 18 ஓடிடி தளங்கள் மற்றும் அவா்களுக்குத் தொடா்புடைய 19 வலைதளங்கள், 10 கைப்பேசி செயலிகள் மற்றும் 57 சமூக ஊடக கணக்குகள் ஆகியவை முடக்கப்பட்டன. ‘படைப்பாற்றல் சுதந்திரம்’ என்ற போா்வையில் ஆபாசத்தைப் பரப்பாமல் இருக்க வேண்டிய ஓடிடி தளங்களின் பொறுப்பை அமைச்சா் அனுராக் சிங் தாக்குா் வலியுறுத்தினாா். ஊடகம், பொழுதுபோக்கு, பெண்ணுரிமை, குழந்தைகள் உரிமை நிபுணா்கள் மற்றும் அரசின் பல்வேறு அமைச்சகம்/துறைகளிடம் கலந்தாலோசிக்கப்பட்டு ‘தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000’-இன்கீழ் ஓடிடி தளங்களுக்கு எதிராக இந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com