மகளிர் நாளன்று சுதா மூர்த்தியை மாநிலங்களவை உறுப்பினராக நியமனம் செய்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், சுதா மூர்த்திக்கு மாநிலங்களவைத் தலைவரும், குடியரசுத் துணை தலைவருமான ஜகதீப் தன்கர் வியாழக்கிழமை பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த நிகழ்வில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், சுதா மூர்த்தியின் கணவரும், இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிறுவனருமான நாராயண் மூர்த்தியும் கலந்து கொண்டனர்.
பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கின் மாமியார் சுதா மூர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.