மக்களவைத் தேர்தலில் நவீன தொழில்நுட்பம்: தேர்தல் ஆணையர்

காகித தாள்கள் மிகக் குறைந்த அளவிலேயே பயன்படுத்தப்படும்
மக்களவைத் தேர்தலில் நவீன தொழில்நுட்பம்: தேர்தல் ஆணையர்

சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாத வகையில் தேர்தல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

புது தில்லியில் தேர்தல் ஆணையக அலுவலகத்தில் இன்று தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் புதிதாக தேர்வாக தேர்தல் ஆணையர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது அவர்கள் வெளியிட்ட அறிவிப்பில்,

மக்களவைத் தேர்தலில் 55 லட்சம் மின்னணு வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவிருக்கின்றன. 1.82 கோடி முதன் முறை வாக்காளர்கள் வாக்களிக்கவிருக்கிறார்கள். சுமார் 88.4 லட்சம் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் உள்ளனர்.

மொத்த வாக்காளர்களில் ஆண் வாக்காளர்கள் 49.7 கோடி பேர், பெண் வாக்காளர்கள் 47.1 கோடி பேர். இவர்களில் 100 வயதைக் கடந்த வாக்காளர்கள் 2.18 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கவிருக்கிறார்கள்.

85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் மற்றும் உடலில் 40 சதவீதத்துக்கு மேல் மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாத வகையில் தேர்தல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காகித தாள்கள் மிகக் குறைந்த அளவிலேயே பயன்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com