ராகுல் நடைப்பயண நிறைவு விழா: அகிலேஷ் யாதவ் பங்கேற்கவில்லை!

ராகுல் நடைப்பயண நிறைவு விழா: அகிலேஷ் யாதவ் பங்கேற்கவில்லை!

வைரஸ் காய்ச்சல் காரணமாக நடைப்பயண நிறைவு விழாவில் பங்கேற்க முடியவில்லை
Published on

உடல் நலக்குறைவு காரணமாக உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வரும் சமாஜவாதி கட்சியின் அகிலேஷ் யாதவ் பங்கேற்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைரஸ் காய்ச்சல் காரணமாக நடைப்பயண நிறைவு விழாவில் பங்கேற்க முடியவில்லை என அக்கட்சி சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைவரும் கேரள மாநில காங்கிரஸ் பிரசார குழு தலைவருமான ரமேஷ் சென்னிதலா, காங்கிரஸ் சார்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தியின் ஒற்றுமை நீதி நடைப்பயணத்தின் நிறைவு விழா மும்பையில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்க இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

ஒற்றுமை நீதி நடைப்பயண நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னையிலிருந்து இன்று (மார்ச் 17) காலை மும்பை புறப்பட்டுச் சென்றார். ராஷ்டிரிய ஜனதாதளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், உத்தவ் தாக்கரே, சரத்பவார் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com