
யூனிலிவர் நிறுவனம் ஐஸ்கிரீம் உற்பத்தி மற்றும் விற்பனையை கைவிட முடிவு செய்துள்ளது. இதன் விளைவாக 75 ஆயிரம் பேர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
லண்டனை தலைமையிடமாகக் கொண்டு யூனிலிவர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. உணவு மற்றும் பானங்கள், சுத்திகரிப்புப் பொருட்கள், அழகுப் பொருட்கள் மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு பொருட்களை இந்நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது.
மாக்னம் மற்றும் மென் & ஜெர்ரி பெயர்கள் மூலம் ஐஸ்கிரீம்கள் உற்பத்தியிலும் யூனிலிவர் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இதனிடையே இந்த இரு நிறுவனங்களையும் தனி நிறுவனங்களாக மேம்படுத்தும் வகையில் யூனிலிவர் நிறுவனம் தனது குழுவிலிருந்து கைவிடவுள்ளது.
மேலும், இதன் செலவினங்களைக் குறைக்கும் நடவடிக்கையிலும் யூனிலிவர் ஈடுபடவுள்ளது. இதன் விளைவாக உலகம் முழுவதும் இந்நிறுவனத்தில் பணிபுரியும் 75 ஆயிரம் பேர் வேலையிழக்கும் அபாயம் ஏற்படவுள்ளது.
இது தொடர்பாக பேசிய யூனிலிவர் நிறுவனத்தின் தலைவர் இயான் மேகின்ஸ், ஐஸ்கிரீம் நிறுவனத்தின் விலகல் மற்றும் அதன் உற்பத்தித் திட்டம் யூனிலிவரின் தனித்திறனை அதிகரித்து அதிக கவனம் செலுத்தும் சூழலை மேம்படுத்தும். எதிர்காலத்தில் உலக அளவிலான தனித்த நிறுவனமாகவும், நிலைத்த வளர்ச்சியையும் உருவாக்க இந்த முடிவு உதவும் எனக் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.