மார்ச் 31-ல் வங்கிகள் செயல்படும்: ரிசர்வ் வங்கி

பொதுத்துறை வங்கிகள் அனைத்தும் மார்ச் 31 ஆம் தேதி செயல்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

வரும் மார்ச் 31 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அனைத்து பொதுத்துறை வங்கிகளும் செயல்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கிகள், அரசுப்பணிகளை கையாளும் வகையில் தங்கள் வங்கிக் கிளைகளை 2023-24 நிதியாண்டின் கடைசி நாளான மார்ச் 31 ஆம் தேதி திறந்து இருக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக, ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறை, ஆனால் வருமான வரி தொடர்பான பணிகளை முடிக்க வேண்டும் என்பதால் மார்ச் 31 ஆம் தேதி வங்கிகள் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோப்புப்படம்
தேர்தல் பத்திர வரிசை எண்களை வழங்கிவிட்டோம்: உச்ச நீதிமன்றத்தில் எஸ்பிஐ

இதில், பாங்க் ஆஃப் பரோடா, பாங்க் ஆஃப் இந்தியா, பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா, கனரா வங்கி, சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா, இந்தியன் வங்கி மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகியவை அடங்கும்.

மேலும், தனியார் வங்கிகளான ஆக்சிஸ் வங்கி, சிட்டி யூனியன் வங்கி, டிசிபி வங்கி, பெடரல் வங்கி, எச்டிஎஃப்சி வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கிஆகிய வங்கிகளும் மார்ச் 31 ஆம் தேதி செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com