60 கேமராக்கள், மெட்டல் சோதனை கருவிகள்... மசூதியில் தொல்லியில் துறை ஆய்வு!

போஜ்ஷாலா கோயில்/மசூதி கட்டடம்: ஆய்வில் கடும் பாதுகாப்பு, தொல்லியல் அதிகாரிகள் அமைப்பு
சர்ச்சைக்குள்ளான போஜ்ஷாலா கோயில்/ கமால் மெளலா மசூதி
சர்ச்சைக்குள்ளான போஜ்ஷாலா கோயில்/ கமால் மெளலா மசூதி

பழங்குடி மக்கள் நிறைந்துள்ள மத்திய பிரதேச தார் மாவட்டத்தின் போஜ்ஷாலா கோயில்/ கமால் மெளலா மசூதி கட்டடத்தில் தொல்லியல் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆய்வைத் தொடங்கியுள்ளனர்.

12-க்கும் அதிகமான தொல்லியல் குழுவினர், வெள்ளிக்கிழமை காலை மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மூத்த காவல் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொள்ளும் இடத்திற்கு சென்றடைந்தனர்.

முதல் கட்ட ஆய்வு வெள்ளிக்கிழமை பிற்பகல் வரை நடைபெற்றது. இரண்டாம் கட்ட ஆய்வு சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

மார்ச் 11-ம் தேதி மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியதன்பேரில் ஆறு மாதத்துக்குள் அறிவியல்பூர்வமான ஆய்வை மேற்கொள்ள தொல்லியல் துறையினர் விரைந்துள்ளனர்.

கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளோடு 60 கேமராக்களின் கண்காணிப்பில் ஆய்வு தொடங்கியது. மெட்டல் பரிசோதனை கருவிகள் கொண்டு சோதிக்கப்பட்ட பின்னரே அதிகாரிகள் உள்நுழைகின்றனர்.

விவகாரத்தின் தன்மையைக் கருத்தில்கொண்டு செல்போன்கள் முதற்கொண்டு உள்ளே எடுத்து செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.

சர்ச்சைக்குள்ளான இடத்தை ஹிந்துகள் வாக்தேவி (சரஸ்வதி) கோயில் என்றும் முஸ்லீம்கள் கமால் மெளலா மசூதி என்றும் வாதிடுகின்றனர். செவ்வாய்கிழமைகளில் ஹிந்துகள் அந்த பகுதியில் வழிபடுவதாகவும் முஸ்லீம்கள் வெள்ளிக்கிழமைகளில் வழிபாடு நடத்தவும் தற்காலிக ஏற்பாடு 2003-ல் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com