
20 வயது இளைஞரை கொடூரமாக குத்தி கொன்ற சிறுவர்கள் கைது செய்யப்பட்டதாக வெள்ளிக்கிழமை தில்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
சங்கம் விஹார் பகுதியைச் சேர்ந்த ஷதாப் என்பவரை பதின்பருவ சிறுவர்கள் குழு வியாழக்கிழமை மாலை தாக்கியதாக காவல்துறைக்கு தகவல் வரவே அந்த பகுதிக்கு காவலர்கள் விரைந்துள்ளனர்.
12 முறை ஷதாப் கத்தியால் குத்தப்பட்டுள்ளார். காவலர்கள் அவரை சாலையோரத்தில் ரத்த வெள்ளத்திற்கு நடுவே மீட்டனர்.
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
கடந்த வாரம் சிறுவர்கள் போதையில் இருந்ததாகவும் அப்போது ஷதாப்புக்கும் அவர்களுக்கும் பிரச்னை உருவானதாகவும் தெரிகிறது.
அவர்களில் சிலர் முன்பே பல குற்றங்களைச் செய்துள்ளனர். சிறுவர்களிடமிருந்து 4 கத்திகள், ஒரு நாட்டுத் துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த குற்ற சம்பவத்தில் தொடர்புடைய 9 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவலர்கள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.