சிறைக்குள் இருந்து அரவிந்த் கேஜரிவால்.. மனைவி வெளியிட்ட விடியோ

சிறைக்குள் இருந்து அரவிந்த் கேஜரிவால்.. மனைவி வெளியிட்ட விடியோ

புது தில்லி: ஆம் ஆத்மி தலைவரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் மனைவி சுனிதா, முதல் முறையாக விடியோவில் தோன்றி உரையாற்றியுள்ளார்.

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், அமலாக்கத் துறையால் கைதாகி, சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில், அவரது அறிக்கையை இவர் உரையாக வாசித்து விடியோ வெளியிட்டுள்ளார்.

அந்த விடியோவில், சுனிதா கூறியிருப்பதாவது, என்னை சிறைக்குள் வெகுநாள்கள் அடைத்துவைக்க முடியாது. விரைவில் நான் வெளியே வருவேன் என்று தில்லி மக்களுக்கு நம்பிக்கை அளித்திருக்கிறார் என்றார்.

மேலும், இந்தியாவிற்குள்ளும் வெளியேயும் நாட்டை பலவீனப்படுத்தும் பல சக்திகள் உள்ளன. நாம்தான் விழிப்புடன் இருக்க வேண்டும், அந்த சக்திகளை அடையாளம் கண்டு அவர்களை தோற்கடிக்க வேண்டும். தில்லியில் உள்ள பெண்கள் கேஜரிவால் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் இருப்பதை நினைக்க வேண்டும். தங்கள் சகோதரனை, மகனை நம்பும்படி கேட்டுக்கொள்கிறேன், அவரை நீண்ட காலம் சிறையில் அடைக்க எந்த சிறையும் இல்லை, நான் விரைவில் வெளியே வந்து என் வாக்குறுதியை நிறைவேற்றுவேன் என்று தெரிவித்திருப்பதாக சுனிதா கூறியுள்ளார்.

மேலும், எனது கைதுக்காக பாஜக தொண்டர்களை யாரும் வெறுக்க வேண்டாம். அவர்களும் நமது சகோதரர்கள்தான். எனது அன்பான நாட்டு மக்களே, நான் கைது செய்யப்பட்டுள்ளேன். நான் சிறைக்கு உள்ளே இருந்தாலும் சரி, வெளியே இருந்தாலும் சரி நாட்டுக்காக உழைத்துக்கொண்டிருப்பேன். எனது ஒட்டுமொத்த வாழ்வும் நாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. எனது வாழ்வில் நான் கடுமையான துயரங்களை அனுபவித்துவிட்டேன், இந்தக் கைது எனக்கு எந்த அதிர்ச்சியையும் கொடுக்கவில்லை என்று சுனிதா, கேஜரிவால் எழுதிய கடிதத்தை வாசித்தார்.

தில்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை மார்ச் 28ஆம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு தில்லி நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

மார்ச் 21ஆம் தேதி இரவு கைது செய்யப்பட்ட அரவிந்த் கேஜரிவாலை, அமலாக்கத் துறை தலைமையகத்துக்கு அழைத்துச் சென்று அவரிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து ரௌஸ் அவென்யூ நீதிமன்ற வளாகத்தில் பணப்பரிவர்த்தனை மோசடி வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தின் சிறப்பு நீதிபதி முன்பு நேற்று மாலை ஆஜர்படுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com