ஜெய்ப்பூரில் பயிற்சி மாணவர்கள் இருவர் தற்கொலை

ஜெய்ப்பூரில் பயிற்சி மாணவர்கள் இருவர் தற்கொலை

ஜெய்ப்பூரில் பயிற்சி மாணவர்கள் இருவர் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் உள்ள பயிற்சி மையம் ஒன்றில் ஜடின்(20), அங்கிதா யாதவ்(19) ஆகியோர் ஒன்றாக பயின்று வந்துள்ளனர். இந்த நிலையில் இருவரும் கார் ஒன்றில் இன்று மயங்கிய நிலையில் காணப்பட்டனர். அவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

ஆனால் அவர்களை காப்பாற்ற முடியவில்லை. இருவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டனர் என்று காவல் அதிகாரி பிரதீப் சர்மா தெரிவித்துள்ளார். முதற்கட்ட தகவல்களின்படி, அவர்கள் இருவரும் ஜெய்ப்பூரில் வசிப்பவர்கள் மற்றும் ஒரு பயிற்சி மையத்தில் ஒன்றாகப் படித்தவர்கள்.

அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களின் உடல்கள் உடற்கூராய்வுக்காக பிணவறைக்கு மாற்றப்பட்டுள்ளன என்று அவர் மேலும் கூறினார். இச்சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com