
போயிங் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டேவ் கால்ஹவுன் தனது பதவியை ராஜிநாமா செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார். இந்த ஆண்டு இறுதியில் தனது இப்பொறுப்பை தகுதியான நபரிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
போயிங் நிறுவன விமானத்தின் தரம் மற்றும் பாதுகாப்பு குறைபாடு காரணமாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து அவர் தனது பதவியை ராஜிநாமா செய்யவுள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் அலாஸ்க ஏர்லைன்ஸுக்கு சொந்தமான போயிங் 737 மேக்ஸ் 9 ரக விமானம், போலந்திலிருந்து புறப்பட்ட 10 நிமிடங்களில் விபத்துக்குள்ளானது.
இந்நிலையில் தனது ராஜிநாமா குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள டேவ் கால்ஹவுன், அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானது போயிங் நிறுவனத்தின் மிகுந்த துயரம் மிகுந்த சம்பவமாக மாறியது தாங்கள் அனைவரும் அறிந்ததுதான். இந்த விபத்து தொடர்பாக வெளிப்படைத்தன்மையுடன் தொடர்ந்து பதிலளித்து வருகிறோம். நிறுவனத்தின் அனைத்து பிரிவுகளிலும் பாதுகாப்பு மற்றும் தரத்தை உறுதி செய்து வருகிறோம்.
உலகத்தின் பார்வையே போயிங் மீது உள்ளது என்பதை நாங்கள் அறிவோம். இந்த கடினமான சூழலிலிருந்து சிறந்த நிறுவனத்தின் தயாரிப்புகளை நாங்கள் வழங்குவோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த ஆண்டுடன் போயிங் நிறுவன தலைமை செயல் அதிகாரி பொறுப்பிலிருந்து விலகவுள்ளதாகவும், தகுதியாக நபரிடம் பொறுப்புகள் ஒப்படைக்கப்படும் எனவும் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.