உஜ்ஜைனி கோயிலில் தீ விபத்து: 13 அர்ச்சகர்கள் காயம்
உஜ்ஜைனில் உள்ள மகாகாளேஸ்வரர் கோயிலில் ஏற்பட்ட தீவிபத்தில் 13 அர்ச்சகர்கள் காயமடைந்தனர்.
மத்தியப் பிரதேச மாநிலம், உஜ்ஜைனில் உள்ள மகாகாளேஸ்வரர் கோயிலில் இன்று காலை கர்ப்பகிரகத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 13 அர்ச்சகர்கள் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக ஆட்சியர் நீரஜ் குமார் சிங் தெரிவித்தார்.
மேலும் விபத்து தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 'குலால்' சமய விழாவின் ஒரு பகுதியாக ஹோலியின் போது பயன்படுத்தப்படும் வண்ணப் பொடி வீசப்பட்டபோது தீ விபத்து ஏற்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவத்தால் உஜ்ஜைனில் பரபரப்பு காணப்பட்டது.
இதனிடையே காயமடைந்து இந்தூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் மற்றும் அமைச்சர் கைலாஷ் விஜய்வர்கியா ஆகியோர் நேரில் சென்று நலம் விசாரித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.