ஹோலி பண்டிகை நாளில் மதுவருந்தி வாகனம் ஓட்டியவர்கள் இத்தனை பேரா...?

மதுபோதையில் வாகனம் ஓட்டிய 800 பேருக்கு சலான்; விபத்துக்கள் குறைந்தது
மாதிரி படம்
மாதிரி படம்IANS
Published on
Updated on
1 min read

ஹோலி பண்டிகை நாளில் மதுவருந்தி வாகனம் ஓட்டிய 800 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக தில்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

போக்குவரத்து காவலர்கள் பகிர்ந்த தகவலின்படி மதுவருந்தி வாகனம் ஓட்டியவர்கள் மீது விதிக்கப்பட்ட் அபராத ரசீதுகளின் எண்ணிக்கை 824 என்றும் மற்ற வழக்குகளில் வாகனோட்டிகளுக்கு விதிக்கப்பட்ட அபராத ரசீதின் எண்ணிக்கை 1,524 எனவும் காவலர்கள் தெரிவித்தனர்.

மேலும் கடந்த ஆண்டை போல இல்லாமல் இந்தாண்டு ஹோலி நாளன்று விபத்துகள் பெருமளவு குறைந்துள்ளதாகவும் அதற்கு காவலர்களின் கடுமையான சோதனைகள்தான் காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து எண்ணிக்கை 24-ல் இருந்து 11-ஆக குறைந்ததாகவும் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

நாட்டின் தலைநகரான தில்லியில் ஹோலி பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட்ட அதே வேளையில் மது அருந்தி அல்லது ஹெல்மெட் அணியாமல் செல்வதால் ஏற்படும் விபத்தைத் தடுக்க தில்லி காவல்துறை பல்வேறு இடங்களில் தொடர் சோதனைகளில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com