காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

வருமானவரித் துறை
வருமானவரித் துறை

பழைய பான் எண்ணை பயன்படுத்தியதற்கு நிலுவையில் உள்ள ரூ.11 கோடி வருமான வரி பாக்கியை செலுத்துமாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வருமானவரித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மக்களவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு 1,823 கோடி அபராதம் செலுத்தக்கோரி வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த 2017-18 நிதியாண்டு முதல் 2020-21 நிதியாண்டு வரையிலான 4 ஆண்டுகளுக்கு வருமான வரி மற்றும் அபராதம் செலுத்தக்கோரி வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

ஏற்கெனவே காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்ட நிலையில் தற்போது வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நான்கு ஆண்டுக்கான வருமான வரித்துறை கணக்கை மறுதணிக்கை செய்ய தடை விதிக்கக் கோரி தில்லி உயர் நீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடியான நிலையில், வருமான வரித்துறை இந்த புதிய நோட்டீஸை அனுப்பியிருக்கிறது.

வருமான வரித்துறை நோட்டீஸைை எதிர்த்து காங்கிரஸ் கட்சி நீதிமன்றத்தை நாட உள்ளதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் கட்சிக்கு ஏற்கெனவே வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பிய நிலையில் தற்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் நோட்டீஸ் அனுப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com