கோதுமை இருப்பை வர்த்தகர்கள் அறிவிக்க வேண்டும்: மத்திய அரசு

கோதுமை இருப்பு அறிவிப்பு: வர்த்தகர்களுக்கு அரசின் புதிய உத்தரவு
கோப்புப் படம்
கோப்புப் படம்

புதுதில்லி: கோதுமை மீதான இருப்பு வரம்பு வரும் ஞாயிற்றுக்கிழமை உடன் காலாவதியாகும் நிலையில், பதுக்கலைத் தடுக்கவும், விலையைக் கட்டுக்குள் வைத்திருக்கவும், மொத்த மற்றும் சில்லறை விற்பனையாளர்கள், பதப்படுத்துபவர்கள் தங்கள் இருப்பு நிலையை அறிவிக்குமாறு அரசு உத்தரவிட்டுள்ளது.

கோதுமை மீதான இருப்பு வரம்பு கடந்த ஆண்டு ஜூன் 12 ஆம் தேதி விதிக்கப்பட்டு, அது மார்ச் 31, 2024 வரை நீட்டிக்கப்பட்டது. ஏப்ரல் 1 முதல் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள பெரிய மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் உள்ளிட்ட வர்த்தகர்கள், மொத்த, சில்லறை விற்பனையாளர்கள் தங்களிடம் உள்ள இருப்புகளை போர்ட்டலில் அறிவிக்க வேண்டும் எனவும், அதன்பிறகு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அறிவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. அதே வேளையில் இணையதளத்தில் தங்களிடம் உள்ள அரிசி கையிருப்பையும் அறிவிக்குமாறு வர்த்தகர்கள் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டனர்.

உணவு மற்றும் பொது விநியோகத் துறை தனது அறிக்கையில், விலைகளைக் கட்டுப்படுத்தவும், உள்நாட்டு சந்தையில் தானியங்கள் எளிதில் கிடைப்பதை உறுதி செய்யவும், கோதுமை மற்றும் அரிசியின் இருப்பு நிலையை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகக் தெரிவித்தது.

பதுக்கலை தடுக்க, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள வர்த்தகர்கள், மொத்த மற்றும் சில்லறை விற்பனையாளர்கள், பெரிய விற்பனையாளர்கள் ஏப்ரல் 1 முதல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இணையதளத்தில் கோதுமையின் இருப்பு நிலையை அறிவிக்க வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது.

2023-24ல் ஜூலை முதல் ஜூன் வரை கோதுமை உற்பத்தி 112.01 மில்லியன் டன்னாக இருக்கும் என்று அரசு நிர்ணயித்துள்ளது. இது முந்தைய ஆண்டு 110.55 மில்லியன் டன்னாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இணையதளத்தில் பதிவு செய்யப்படாத எந்தவொரு நிறுவனமும், பதிவு செய்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கோதுமை மற்றும் அரிசி கையிருப்பை வெளியிடத் தொடங்கலாம் என அரசு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com