ரீல்ஸ் எடுக்க கன்வேயர் பெல்டில் படுத்த பெண்: வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!

ரீல்ஸ் எடுக்க கன்வேயர் பெல்டில் படுத்த பெண்: வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!
Published on
Updated on
1 min read

ரீல்ஸ் எடுக்க, விமான நிலையத்தின் கன்வேயர் பெல்டில் படுத்து விடியோ எடுத்த பெண்ணை, சமூக வலைத்தளத்தில் மக்கள் வறுத்தெடுத்துவிட்டனர்.

சமூக வலைத்தளத்தில் மிகவும் பிரபலமான பெண் ஒருவர், தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில், அந்த விடியோவைப் பதிவிட, அதில் பலரும் தங்களது கருத்துகளைப் பதிவு செய்திருந்தனர்.

ஒரு விமான நிலையத்துக்குள், பெண் ஒருவர் ரீல்ஸ் எடுப்பதற்காக செய்த செயலுக்கு சமூக வலைத்தள மக்கள் கடும் கண்டனத்தைப் பதிவு செய்ள்ளனர். ஆனால், ஒரு பக்கம், அந்தப் பெண் எதற்காக இதைச் செய்தாரோ, அது நிறைவேறியது என்றே தோன்றுகிறது. காரணம், அவரது விடியோவை கிட்டத்தட்ட 2.36 ஆயிரம் பேர் பார்த்திருக்கிறார்கள். இன்னும் பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள்.

சுஜாதா தஹால் என்ற பெண் இந்த மாதத் தொடக்கத்தில் ஒரு விடியோவை பகிர்ந்திருந்தார். இந்த விடியோவை பலரும் பைத்தியக்காரத்தனம் என வன்மையாகக் கண்டித்திருந்தனர். அந்த விடியோவில், விமான நிலையத்தில் பயணிகளின் உடைமைகளை பரிசோதிக்க வைக்கப்பட்டிருக்கும் கன்வேயர் பெல்டில் அப்பெண் படுத்துக்கொள்கிறார். கன்வேயர் பெல்ட் மெதுவாக நகர்கிறது. பிறகு அதிலிருந்து எழுந்து நின்று விடியோவுக்கு போஸ் கொடுக்கிறார்.

முதலில் அமர்ந்துகொண்ட அவர் பிறகு அதில் படுத்தேவிடுகிறார். பிறகு எழுந்துநின்று சிரிப்பதைப் பார்த்த சமூக வலைத்தள மக்கள் ஆவேசத்துடன் கருத்துகளை கமெண்ட் பாக்ஸில் கொட்டி வருகிறார்கள். சிலர், அவரது தலைமுடி அந்த பெல்ட்டில் சிக்கிக் கொள்ளும் என்று எதிர்பார்த்தேன், சிலர் அவருக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும், ஏன் அவரை காவல்துறையினர் கைது செய்யவில்லை என்று பலவாறு கருத்துகள் வந்துள்ளன.

ஒருபக்கம் கமெண்டுகள் விழுந்தாலும் அதிகம் பார்க்கப்பட்ட விடியோவிலும் இடம்பிடித்துவிட்டது. அதில் ஒரு கருத்தாக, ஒருமுறை தனது உறவினரின் விரல் துண்டிக்கப்பட்டுவிட்டதாகவும், நல்ல வேளை இந்தப் பெண் பிழைத்துக்கொண்டார் என்றும் ஆச்சரியத்துடனும் சிலர் பகிர்ந்திருக்கிறார்கள்.

உண்மையில் ரீல்ஸ் எடுக்கிறேன் பேர்வழி என்று இதுபோன்ற அபாயகரமான செயல்களை பெரியவர்கள் செய்யும்போது, நல்வாய்ப்பாக அவர்கள் தப்பித்துக் கொள்ளலாம். சிறார்கள் இதுபோன்று முயற்சிக்கும்போது விபத்து நேரிட்டால்.. யார் பொறுப்பு? சமூக ஊடகத்தில் பிரபலமாக இருக்கும் பெரியவர்களும் சமூக பொறுப்புடன் நடந்து கொள்ளலாமே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com