நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?
நீட் நுழைவுச் சீட்டு பதிவிறக்கம்: உதவி எண்கள் வெளியீடு
நீட் நுழைவுச் சீட்டு பதிவிறக்கம்: உதவி எண்கள் வெளியீடு

இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்காக நடத்தப்படும் நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு இன்று வெளியிடப்பட்ட நிலையில், அதனை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் நீட் தேர்வுக்கு 24 லட்சம் பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள். மே 5ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெறவிருக்கும் நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு மே 2ஆம் தேதி வெளியிடப்பட்டது.

தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நுழைவுச் சீட்டு வெளியாகியிருந்தாலும், பல மாணவர்களால் அதனை பதிவிறக்கம் செய்ய முடியாமல் உள்ளது. சிலருக்கு தவறான தகவல் தரப்பட்டிருப்பதாக தகவல் காண்பிக்கிறது. சிலருக்கு நுழைவுச் சீட்டில் புகைப்படம் உள்ளிட்டைவை சரியாக பதிவிறக்கம் ஆகாமல் உள்ளது.

முழுமையாக நுழைவுச் சீட்டு காண்பிக்கப்பட்டாலும், அதனை பதிவிறக்கம் செய்யும்போது, பக்கம் காணாமல் போவது போன்ற சில பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன.

இது குறித்து ஏராளமான மாணவர்கள் சமூக வலைத்தளங்களில் தேசிய தேர்வு முகமைக்கு புகார் அளித்துள்ளனர். இதனால் வெளியே ஆன்லைன் மையங்களுக்கு வந்து பதிவிறக்கம் செய்யும் மாணவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தேசிய தேர்வு முகமை, சிக்கலை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று மாணவர்கள் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com