25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி!

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! என்ன சொல்கிறார் ஸ்மிருதி இரானி?
சோனியா காந்தி குடும்பம்
சோனியா காந்தி குடும்பம்

கடந்த 25 ஆண்டுகளுக்குப் பிறகு, முதல் முறையாக, அமேதி மக்களவைத் தொகுதியில் காந்தி குடும்பத்தினர் வேட்பாளராக களமிறங்காமல் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

அமேதி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் கிஷோரி லால் ஷர்மா போட்டியிடுவார் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்தத் தொகுதியில் ராகுல் காந்தி மூன்று முறை வெற்றிபெற்றுள்ளார். ஆனால், கடந்த முறை ஸ்மிருதி இரானி பாஜக வேட்பாளராக போட்டியிட்டு ராகுலை வீழ்த்திய நிலையில், ராகுல் தற்போது ரே பரேலி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து ஸ்மிருதி இரானி கூறுகையில், அமேதியில் தங்களது தோல்வியை காங்கிரஸ் இப்போதே ஒப்புக்கொண்டுவிட்டது என்கிறார்.

சோனியா காந்தி குடும்பம்
லாலு பிரசாத் மகள் ரோஹிணிக்கு எதிராக களமிறங்கும் லாலு பிரசாத்?

அதாவது, அமேதி தொகுதியில் காந்தி குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் போட்டியிடாமல் தவிர்க்கப்பட்டிருப்பதன் மூலம், தேர்தல் நடக்கும் முன்பே, காங்கிரஸ் கட்சி அதன் தோல்வியை ஒப்புக்கொண்டுவிட்டது என்று ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.

கடந்த 1967ஆம் ஆண்டு முதல் அமேதி காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்துள்ளது, இங்கு ராகுல் மூன்று முறை எம்.பி.யாக இருந்தால், அதற்கு முன்பு சோனியா எம்.பி.யாக இருந்தார். அவ்வளவு ஏன், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் சஞ்சய் காந்தி கூட அமேதி தொகுதி எம்.பி.யாக இருந்தவர்கள்தான்.

இதற்கு முன்பு, காந்தி குடும்பம் இல்லாத தேர்தலை அமேதி கடைசியாக 1998ஆம் ஆண்டுதான் சந்தித்தது. அப்போது ராஜீவ் காந்தியின் நெருங்கிய நண்பர் சதீஷ் ஷர்மா போட்டியிட்டு தோற்றது குறிப்பிடத்தக்கது.

அமேதியில் போட்டியிடும் கே.எல். ஷர்மாவுக்கு வெற்றி வாய்ப்பு?

அமேதி தொகுதியில் ராகுல் போட்டியிடவில்லை என்பது குறித்த அறிவிப்பு வெளியானது முதல், பல்வேறு தரப்பிலும் விமரிசனங்கள் எழுந்துள்ளன. அமேதியிலிருந்து ராகுல் ஓடுவதாக பாஜக தலைவர்கள் விமரிசித்துள்ளனர்.

ஆனால், காங்கிரஸ் தரப்பில் என்ன சொல்லப்படுகிறது என்றால் ராகுல் தோற்று விடுவார் என்ற பயத்திலேயே அமேதியை விட்டு ஓடுவதாகக் கூறுகிறார்கள். ஆனால், இந்த பேச்செல்லாம் வெகு நாள் நீடிக்காது.

ஒருவேளை, அமேதியில் கே.எல். ஷர்மா தோல்வியடைந்தால் அது பெரிய விஷயமல்ல, ஆனால் அதுவே அவர் வெற்றி பெற்றால், அது மிகப்பெரிய விஷயம்தானே? அமேதி தொகுதியை முற்றிலும் அறிந்தவர் கே.எல். ஷர்மா. அவரும் காந்தி குடும்பத்தைச் சேர்ந்தவர்தான் என்கிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com