

தில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தில்லி கலால் கொள்கை வழக்கில் தில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை மத்திய புலனாய்வுத் துறை(சிபிஐ) கடந்த பிப். 26ஆம் தேதி கைது செய்தது. அதைத்தொடர்ந்து கடந்த மார்ச் 9 அன்று பணமோசடி வழக்கில் சிசோடியாவை அமலாக்கத்துறை கைது செய்து திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே ஊழல் மற்றும் பணமோசடி வழக்குகளில் இருந்து தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி தில்லி ரோஸ் அவென்யூ கோர்டில் மணீஷ் சிசோடியா தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்கள் ஏப்ரல் 30 நீதிபதி காவேரி பாவேஜா முன்பு விசாரணைக்கு வந்தபோது, ஜாமீன் வழங்குவதற்கான சூழல் தற்போது சரியாக இல்லை எனக்கூறி, மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து, தில்லி நீதிமன்றத்தில் மணீஷ் சிசோடியா நேற்று மீண்டும் மேல்முறையீடு செய்துள்ள நிலையில், சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.