
பேடிஎம் நிறுவனத்தின் தலைவர் பவேஷ் குப்தா தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
தனிப்பட்ட காரணங்களுக்காக தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும் தன்னுடைய ஆதரவு நிறுவனத்திற்கு தொடர்ந்து இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
அவரது ராஜிநாமா நிறுவனத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்றும் மேலும் நிறுவனத்தின் சேவைகளில் இருந்து அவர் விடுவிக்கப்படுவார் என்றும் பேடிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியின் உத்தரவின்படி, பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு அளித்து வந்த வங்கி சார்ந்த சேவைகளை மார்ச் 15 முதல் நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.