ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

பாகிஸ்தானைக் கையாளுவதில் காங்கிரஸ் அரசு பலவீனமானது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

பயங்கரவாத விவகாரத்தில் பாகிஸ்தானைக் கையாளுவதில் முந்தைய காங்கிரஸ் அரசு பலவீனமானது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலம் பாலமு மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். 2014 மக்களவைத் தேர்தலில் ஒரு ஓட்டு பலத்துடன் பயங்கரவாத விவகாரத்தில் பாகிஸ்தானை நோக்கிய அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு ராகுல்காந்தி இந்தியாவின் பிரதமராக வருவார் என்று பாகிஸ்தான் தலைவர்கள் நம்புகிறார்கள்.

முன்பு பயங்கரவாதிகள் அப்பாவிகளைச் சுதந்திரமாகக் கொன்றனர். அரசு பாகிஸ்தானுக்கு கடிதங்கள் எழுதின. ஆனால் கடிதங்களுக்குப் பதில் பயங்கரவாதிகளை அனுப்பியது பாகிஸ்தான்.

உங்களின் ஒரு வாக்கு போதும்.. புதிய இந்தியாவை உருவாக்க முடியும். ஓட்டின் மதிப்பை மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். கடந்த தேர்தலில் மக்கள் காங்கிரஸுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜகவுக்கு ஓட்டளித்தது. அதன் விளைவாக ஜம்மு-காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது.

ஜார்க்கண்ட் மற்றும் பிகாரில் இருந்து மக்கள் நாட்டை காக்க எல்லையில் இறக்கும் ஒரு காலம் இருந்தது. காங்கிரஸின் கோழைத்தனமான அரசு உலக அரங்கில் பேசி அழுகின்றன. இந்தியா உலக அரங்கில் அழும் காலம் மாறி தற்போது பாகிஸ்தாஸ் உதவிக்காக அழும் நிலை வந்துவிட்டது.

பாகிஸ்தானில் உள்ள தலைவர்கள் காங்கிரஸின் ஷெஜாதா பிரதமராக வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறார்கள். ஆனால் வலிமையான இந்தியா இப்போது வலுவான ஆட்சியை மட்டுமே விரும்புகிறது. ஜார்க்கண்ட், ஒடிசா, சத்தீஸ்கர், பிகார், ஆந்திரம், பசுபதி உள்ளிட்ட மாநிலங்களில் நக்சல்கள் பயங்கரவாதத்தைப் பரப்பிவருகின்றனர். இதனால் பல தாய்மார்கள் நம்பிக்கை இழந்து வருகின்றனர் என்று அவர் தெரிவித்தார்.

ஜார்க்கண்டில் நான்கு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. மே 13, 20, 25 மற்றும் ஜூன் 1.

கடந்த 2019இல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஜார்க்கண்டில் 12 இடங்களை வென்றது, பாஜக 11 இடங்களில் வெற்றி பெற்றது. ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரசுக்கு தலா ஒரு இடம் கிடைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com