பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் ஜரண்வாலியிலிருந்து சூரன்கோட் விமானப் படை தளத்துக்கு வீரா்கள் சனிக்கிழமை மாலை 6 மணியளவில் திரும்பி கொண்டிருந்தனா். அப்போது சசிதா் பகுதியருகே வீரா்கள் பயணித்த 2 வாகனங்கள் மீது 4 பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினா். வீரா்களும் பதில் தாக்குதலைத் தொடங்கினாா். இதையடுத்து, வனப்பகுதி வழியாக பயங்கரவாதிகள் தப்பியோடினா்.

இந்தத் துப்பாக்கிச்சூட்டில் 5 பாதுகாப்புப் படை வீரா்கள் காயமடைந்தனா். அவா்கள் அருகிலிருக்கும் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு சிகிச்சை பலனின்றி வீரா் ஒருவா் வீரமரணமடைந்தாா். மற்றொரு வீரரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு விரைந்த ராணுவம் மற்றும் காவல் துறையினா், அந்த இடத்தைச் சுற்றி வளைத்து தப்பியோடிய பயங்கரவாதிகளை தேடி வருகின்றனா்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி
அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

இந்நிலையில், இந்திய விமானப்படை வீரரின் மரணத்திற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில் கண்டனத்தையும், இரங்கலையும் தெரிவித்துள்ளார்.

அதில், "ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் ​​பகுதியில் ராணுவ வாகனத்தின் மீது நடத்தப்பட்ட கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது.

வீரமரணம் அடைந்த ராணுவ வீரருக்கு எனது பணிவான அஞ்சலியை செலுத்துவதுடன் , அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இத்தாக்குதலில் காயமடைந்த வீரர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று நம்புகிறேன்," என்று தெரிவித்தார்,

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com