3-ம் கட்டத் தேர்தல்: 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

அதிகபட்சமாக மேற்கு வங்க மாநிலத்தில் 14.22 சதவிகிதமும், குறைந்தபட்சமாக மகாராஷ்டிரத்தில் 6.64 சதவிகிதமும் வாக்குகள் பதிவு
3-ம் கட்டத் தேர்தல்: 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

மக்களவைத் தேர்தல் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், 9 மணி வரை பதிவான வாக்கு சதவிகிதத்தை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

குஜராத், கா்நாடகம் உள்ளிட்ட 10 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 93 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், 9 மணி நிலவரப்படி 10.57 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதிகபட்சமாக மேற்கு வங்க மாநிலத்தில் 14.22 சதவிகிதமும், குறைந்தபட்சமாக மகாராஷ்டிரத்தில் 6.64 சதவிகிதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.

3-ம் கட்டத் தேர்தல்: 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்!
3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

பிற மாநிலங்களில்..

அஸ்ஸாம் - 10.12%

சத்தீஸ்கர் - 13.24%

பிகார் - 10.03%

தாத்ரா & நாகர் ஹவேலி மற்றும் டாமன் & டையூ - 10.13%

கோவா - 12.35%

குஜராத் - 9.87%

கர்நாடகம் - 9.45%

மத்திய பிரதேசம் - 14.22%

உத்தர பிரதேசம் - 11.63%

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com