அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

அஸ்ஸாமில் அதிகம், மகாராஷ்டிரத்தில் குறைவு: 3ம் கட்ட வாக்குப்பதிவு விவரங்கள்
அஸ்ஸாமில் வாக்களித்த மையை காண்பிக்கும் பெண்
அஸ்ஸாமில் வாக்களித்த மையை காண்பிக்கும் பெண்ANI

மக்களவை தேர்தலின் 3-ம் கட்ட வாக்குப் பதிவில் ஏறத்தாழ 60.97 சதவிகிதம் வாக்குப் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாக அஸ்ஸாமில் 75.01 சதவிகிதமும் குறைந்தபட்சமாக மகாராஷ்டிரத்தில் 53.95 சதவிகிதமும் வாக்குப்பதிவாகியுள்ளது.

3-ம் கட்ட வாக்குப் பதிவு செவ்வாய்க்கிழமை 11 மாநிலங்களில் உள்ள 93 தொகுதிகளுக்கு நடைபெற்றது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 6 மணிக்கு நிறைவுற்றது.

அஸ்ஸாம், மகாராஷ்டிரம் தவிர மற்ற மாநிலங்களில் பதிவான வாக்குப்பதிவு விவரங்கள்:

- பிஹாரில் 56.55 சதவிகித வாக்குப் பதிவு

- சத்தீஸ்கரில் 66.94 சதவிகித வாக்குப் பதிவு

- கோவாவில் 74 சதவிகித வாக்குப் பதிவு

- குஜராத்தில் 56.21 சதவிகித வாக்குப் பதிவு

- கர்நாடகத்தில் 66.80 சதவிகித வாக்குப் பதிவு

- மத்திய பிரதேசத்தில் 62.79 சதவிகித வாக்குப் பதிவு

- உத்தரப் பிரதேசத்தில் 57.04 சதவிகித வாக்குப் பதிவு

- மேற்கு வங்கத்தில் 73.93 சதவிகித வாக்குப் பதிவு

- யூனியன் பிரதேசமான தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூவில் 65.23 சதவிகிதm வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இன்னும் மீதமிருக்கும் நான்கு கட்டத் தேர்தலும் முடிவடைந்த பிறகு வாக்கு எண்ணிக்கை ஜுன் 4-ம் தேதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com