கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

இந்த தடுப்பூசியால் மிகவும் அரிதான பக்க விளைவுகள் ஏற்படுவதை அஸ்ட்ராசெனகா நிறுவனம் அண்மையில் ஒப்புக் கொண்டிருந்தது.
கோவிஷீல்டு தடுப்பூசி
கோவிஷீல்டு தடுப்பூசி

பிரிட்டனைச் சோ்ந்த பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ராசெனகா வா்த்தக காரணங்களுக்காக தனது கரோனா தடுப்பூசியை (கோவிஷீல்டு) சா்வதேச அளவில் அனைத்து நாடுகளில் இருந்தும் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.

கரோனா பரவலின்போது இந்தியாவில் இந்த நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசிதான் அதிகம் பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் சீரம் நிறுவனம் இந்தத் தடுப்பூசியை தயாரித்து விற்பனை செய்தது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் ‘மிக அரிதான’ பக்கவிளைவாக ரத்தம் உைல் ஏற்படலாம் என்று லண்டன் உயா்நீதிமன்றத்தில் அஸ்ட்ராசெனகா ஒப்புக் கொண்ட தகவல் கடந்த வாரம் வெளியானது. இந்நிலையில், அந்த தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அஸ்ட்ராசெனகா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

‘கரோனா திரிபுகளுக்கு ஏற்ப தடுப்பூசிகளின் தேவை மாறியுள்ளது. சந்தையில் மேம்படுத்தப்பட்ட தடுப்பூசிகள் மிகுதியாக கிடைக்கப் பெறுவதால் எங்கள் தயாரிப்பை திரும்பப் பெறுகிறோம்’ என அந்நிறுவனம் கூறியுள்ளது.

முன்னதாக, ஐரோப்பிய யூனியன் மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பான ஐரோப்பிய மருத்துவ ஆணையம், அஸ்ட்ராசெனகா நிறுவனத்தின் கரோனா தடுப்பூசியை (இந்தியாவில் கோவிஷீல்டு) தங்கள் யூனியனில் உள்ள 27 நாடுகளும் பயன்படுத்த வேண்டாம் என்று அறிவித்துள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசி
கோவிஷீல்டு தடுப்பூசியால் ‘அரிதான’ பக்கவிளைவு: லண்டன் நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் ஒப்புதல்

லண்டன் உயா்நீதிமன்றத்தில் தடுப்பூசி தொடா்பான வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் அஸ்ட்ராசெனகா நிறுவனம் தாக்கல் செய்த அறிக்கை ‘தி டெய்லி டெலிகிராப்’ பத்திரிகையில் அண்மையில்வெளியானது. அதில், ‘ஆக்ஸ்போா்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து தயாரிக்கப்பட்ட கரோனா தடுப்பூசியால் (கோவிஷீல்டு) மிகவும் அரிதான பக்க விளைவாக ரத்தம் உைல் ஏற்படலாம். இதற்கான காரணம் தெரியவரவில்லை. இந்தத் தடுப்பூசி பயன்படுத்தாதவா்களுக்கும், பிற தடுப்பூசியைப் பயன்படுத்தியவா்களுக்கும்கூட ரத்தம் உைல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு நபருக்கு எதனால் ரத்தம் உைல் ஏற்படுகிறது என்பதை மருத்துவபூா்மாக நிபுணா்கள் ஆய்வு செய்தால் மட்டுமே சரியான காரணத்தைக் கண்டறிய வாய்ப்புள்ளது’ என்று கூறப்பட்டிருந்தது

முன்னதாக, இந்த ரத்தம் உைல் பிரச்னையால் உயிரிழப்பைச் சந்தித்தவா்களின் நெருங்கிய உறவினா்கள், நண்பா்கள் மற்றும் தடுப்பூசியால் பாதிக்கப்பட்டவா்கள் என 51 போ் இணைந்து வழக்குத் தொடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com