ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்!

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிர்வாகத்துடன் சமரசம்
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் (கோப்புப் படம்)
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் (கோப்புப் படம்)

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர்களில் ஒரு பகுதியினர் வேலை நிறுத்தத்தைத் திரும்ப பெற்றுள்ளனர். நிர்வாகத்துடன் ஏற்பட்ட உடன்படிக்கையின் பேரில் அவர்கள் வாபஸ் பெற்றதாக பிடிஐ தெரிவித்தது.

ஊழியர்கள் எழுப்பிய குற்றச்சாட்டுகளை நிவர்த்தி செய்து தருவதாக நிர்வாகம் ஒப்புக்கொண்டதாகவும் மேலும் பணி நீக்கம் செய்யப்பட்ட 25 ஊழியர்களின் பணி நீக்க ஆணையைத் திரும்ப பெறுவதாகவும் நிர்வாகம் தெரிவித்ததாக பிடிஐ குறிப்பிட்டுள்ளது.

டாடா குழுமத்தின் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர்கள் திடீரென பணிக்குச் செல்லாததால் செவ்வாய்க்கிழமை மாலை முதல் 170 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு ஆயிரக்கணக்கான பயணிகள் தவிக்க நேர்ந்தது.

வியாழக்கிழமை தில்லியில் உள்ள தொழிலாளர்கள் ஆணையத்தில் இரு தரப்பில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இந்த உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com