விமானிகள் பற்றாக்குறை... ஏர் இந்தியா நிறுவன விமானங்களின் சேவை குறைப்பு

வேலை நிறுத்தம் காரணமாக விமானிகள் பற்றாக்குறை சமாளிக்கும் விதமாக அடுத்த சில நாள்களுக்கு ஏா் இந்தியா சேவை குறைப்பு
விமானிகள் பற்றாக்குறை... ஏர் இந்தியா நிறுவன விமானங்களின் சேவை குறைப்பு

புது தில்லி: விமானிகள் வேலை நிறுத்தம் காரணமாக விமானிகள் பற்றாக்குறை சமாளிக்கும் விதமாக அடுத்த சில நாள்களுக்கு ஏா் இந்தியா, ஏா் இந்தியா எக்ஸ்பிரஸின் விமானங்கள் சேவை குறைக்கப்படுவதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி அலோக் சிங் தெரிவித்துள்ளார்.

இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள விமான நிலையங்களில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ், ஏஐஎக்ஸ் கனெக்ட் ஆகியவை டாடா குழுமத்தின் துணை நிறுவனங்களாகும். அவ்விரு நிறுவனங்களை ஒன்றிணைக்கும் நடவடிக்கையில் டாடா குழுமம் ஈடுபட்டுள்ளது. இந்த நடவடிக்கை தொடங்கியதில் இருந்தே ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவன விமானப் பணியாளா்களின் ஒரு பகுதியினா் அதிருப்தி அடையத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.

அதேவேளையில், ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தவறாக நிா்வகிக்கப்படுவதாகவும், அனைத்துப் பணியாளா்களும் சமமாக நடத்தப்படுவதில்லை என்றும் கடந்த மாதம் ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியா்கள் சங்கம் குற்றஞ்சாட்டியது.

இந்தநிலையில், உடல்நலம் சரியில்லை என்று கூறி, அந்த நிறுவன விமானிகளில் 100-க்கும் மேற்பட்டவா்கள் செவ்வாய்க்கிழமை இரவு முதல் பணிக்கு வரவில்லை. இதனால் ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் பயணப்பதில் கால தாமதம் ஏற்பட்டதுடன், அந்த நிறுவனத்தின் 90 சதவீதத்துக்கும் மேலான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள விமான நிலையங்களில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுனர்.

விமானிகள் பற்றாக்குறை... ஏர் இந்தியா நிறுவன விமானங்களின் சேவை குறைப்பு
தென் சென்னை வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி பழுது!

இந்த நிலையில், விமானிகள் பற்றாக்குறை சமாளிக்கும் விதமாக அடுத்த சில நாள்களுக்கு ஏா் இந்தியா, ஏா் இந்தியா எக்ஸ்பிரஸின் விமானங்கள் சேவை குறைக்கப்படுவதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி அலோக் சிங் தெரிவித்துள்ளார்.

விமானிகள் வேலை நிறுத்தம் காரணமாக விமானங்கள் சேவையில் இடையூறுகள் ஏற்பட்டுள்ளதை அடுத்து விமானிகள் பற்றாக்குறை சமாளிக்கும் விதமாக அடுத்த சில நாள்களுக்கு ஏா் இந்தியா, ஏா் இந்தியா எக்ஸ்பிரஸின் விமானங்கள் சேவை குறைக்கப்படுவதாக அலோக் சிங் கூறியுள்ளார்.

இதனிடையே சென்னை-மும்பை ஏர் இந்தியா, சென்னை-கொல்கத்தா செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பிரச்னைகளை உடனடியாகத் தீர்க்குமாறு விமான நிறுவனத்தை மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

டாடா குழுமத்திற்கு சொந்தமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், மார்ச் மாத இறுதியில் தொடங்கிய கோடை கால அட்டவணையில் தினமும் சுமார் 360 விமானங்களை இயக்கி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com