வாக்குகளை அள்ளிய காங். வறுமையை ஒழிக்கவில்லை: நயாப் சைனி

பிரதமர் மோடி 3வது முறையாக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பார்..
வாக்குகளை அள்ளிய காங். வறுமையை ஒழிக்கவில்லை: நயாப் சைனி

பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பார் என ஹரியாணா முதல்வர் நயாப் சிங் சைனி திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

முதல்வர் சைனி செய்தியாளர்களுடன் பேசினார். நரேந்திர மோடி தலைமையிலான அரசால் இந்தியாவில் மட்டுமல்லாது வெளிநாட்டிலும் மக்கள் மத்தியில் அதிகம் பேசப்படுகிறது, மக்கள் உற்சாகத்துடன் காணப்படுகின்றனர். கடந்த பத்து ஆண்டுகளாக பாஜக அரசு மக்களுக்காக உண்மையாகவும், அதிகமாகவும் உழைத்துள்ளது.

காங்கிரஸ் ஆட்சியில் அறிவிப்புகள் மட்டுமே இருந்தன தவிர எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை.1970ல் இந்தியா காந்தி கரிபி ஹடாவோ(வறுமையை அகற்றுங்கள்) என்ற முழக்கத்தை எழுப்பினார். ஆனால் கடந்த 35 ஆண்டுகளாகக் காங்கிரஸ் ஓட்டுகளை அள்ளியதே தவிர வறுமை முடிவுக்கு வரவில்லை என்று அவர் கூறினார்.

வாக்குகளை அள்ளிய காங். வறுமையை ஒழிக்கவில்லை: நயாப் சைனி
அனுமன் கோயிலில் கேஜரிவால் வழிபாடு!

ஹரியாணா மாநிலத்தில் 10 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் மே 25-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது.

2024 மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com