அனுமன் கோயிலில் கேஜரிவால் வழிபாடு!
கேஜரிவால் தலைநகரில் உள்ள கனாட்பிளேஸில் உள்ள அனுமன் கோயிலில் வழிபாடு செய்தார்.


திகார் சிறையிலிருந்து இடைக்கால ஜாமீனில் வெளிவந்துள்ள தில்லி முதல்வர் கேஜரிவால் தலைநகரில் உள்ள கனாட்பிளேஸில் உள்ள அனுமன் கோயிலில் வழிபாடு செய்தார்.
கலால் கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு மே 10(நேற்று) இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன்படி, மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்பதற்காக 50 நாள்களுக்கும் மேலாக திகார் சிறையில் இருந்துவந்த கேஜரிவாலுக்கு 21 நாள்களுக்கு தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்கலாம், ஆனால் பல்வேறு நிபந்தனைகளுடன் உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது.

நேற்று மாலை திகார் சிறையிலிருந்து கேஜரிவால் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில், இன்று கனாட்பிளேஸில் உள்ள அனுமன் கோயிலுக்குச் சென்று வழிபாடு மேற்கொண்டார். அவருடன் அவரது மனைவி சுனிதா கேஜரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோரும் சென்றனர்.
அனுமன் தரிசனத்திற்குப் பிறகு கேஜரிவால், கோடிக்கணக்கான மக்களின் பிரார்த்தனை மற்றும் உச்சநீதிமன்றத்தின் நீதியுடன் மீண்டும் வெளியே வருவதில் மகிழ்ச்சி அடைவதாக அவர் தெரிவித்தார்.
கேஜரிவால் ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்திற்குச் சென்று அங்கு செய்தியாளர்களைச் சந்திக்கிறார். அதன்பிறகு, இன்று மாலையில் தெற்கு தில்லியில் நடைபெறும் தேர்தல் பிரசார ஊர்வலங்களில் பங்கேற்று ஆம் ஆத்மி-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள சாஹி ராமுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்கிறார். இவர் பாஜக எம்எல்ஏ ராம்வீர் பிதூரியை எதிர்கொள்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...