12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

அடுத்த 2 மாதங்களில் திரும்ப வந்து வேகமாக பணிகளைத் தொடர்வோம்: முதல்வர் ஸ்டாலின்

இடைக்கால நிதிநிலை அறிக்கை பதிலுரையில் முதல்வர் பேசியதாவது:

சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின். - படம்: DIPR

Published On :

அடுத்த 2 மாதங்களில் திரும்பவும் ஆட்சிக்கு வந்து, வேகமாக பணிகளைத் தொடர்வோம் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இடைக்கால நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடரின் இறுதிநாள் கூட்டம், பேரவைத் தலைவர் மு.அப்பாவு தலைமையில் வெள்ளிக்கிழமை காலை தொடங்கியது.

இடைக்கால பொது நிதிநிலை அறிக்கை, இடைக்கால வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான பொதுவிவாதத்துக்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் பதில் உரையாற்றினார்கள்.

இதனிடையே, இடைக்கால நிதிநிலை அறிக்கை பதிலுரையில் முதல்வர் பேசியதாவது:

”234 தொகுதிகளையும் என்னுடைய தொகுதிகளாக நினைத்து செயலாற்றி உள்ளேன். என்னைத் தேர்ந்தெடுத்து அனுப்பிய கொளத்தூர் தொகுதி மக்களுக்கு நன்றி. மிகப்பெரிய வாய்ப்பு தந்த தமிழ்நாடு மக்களுக்கும் நன்றி.

அடுத்த இரண்டு மாதங்களில் மீண்டும் வந்து, நிச்சயம் இன்னும் கூடுதலாக வேகமாக பணிகளைத் தொடர்வோம் என்ற நம்பிக்கை தமிழ்நாட்டை மக்களைபோல எனக்கும் இருக்கிறது.

எனக்குத் தரப்பட்ட பொறுப்பை மிகச் சிறப்பாக செய்ததாகவே நான் உணர்கிறேன். தலைமைப் பொறுப்பில் உள்ளோருக்கு பொறுமை, நிதானம், சகிப்புத்தன்மை, எதையும் தாங்கும் வல்லமை, எல்லோரிடத்திலும் அன்பாக இருத்தல், ஊக்கத்தோடு செயலாற்றுதல் ஆகிய பண்புகள் நிச்சயம் தேவை. இதனையே நானும் கடைபிடித்து இருக்கிறேன்.

எங்களது சாதனைகளை நாங்களே மிஞ்சும் அளவுக்கு திராவிட மாடல் 2.0 ஆட்சி இருக்கும். உறுதியாக மீண்டும் வென்று ஆட்சிக்கு வந்து, தமிழ் மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவோம்.

அரசின் குறைகளை சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சாதனைகளுக்கு தோள் கொடுத்த தோழமைக் கட்சித் தலைவர்களுக்கும் நன்றி” என்றார்.

Summary

Chief Minister Stalin has said in the Legislative Assembly that we will return to power in the next 2 months and continue the work quickly.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.