தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்திலும் இஸ்லாமிய பெண்களை ஹிஜாப்பை அகற்றச் சொல்லி பாஜக வேட்பாளர் அரவிந்த் தர்மபுரி பிரச்னையில் ஈடுபட்டுள்ளார்.
தெலங்கானாவில் இன்று காலை 7 மணி முதல் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், நிஜாமாபாத் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட வாக்குச் சாவடிகளில் பாஜக வேட்பாளர் அரவிந்த் தர்மபுரி பார்வையிட்டார்.
அப்போது, முஸ்லிம் பெண்களின் ஹிஜாப்பை அகற்றச் சொல்லி அவர்களின் வாக்காளர் அடையாள அட்டையுடன் முகத்தை சரிபார்க்கக் கோரி தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகிய நிலையில், பலரும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
ஏற்கெனவே, ஹைதராபாத் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட வாக்குச்சாவடியில் ஹிஜாப்பை அகற்றக் கோரிய பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வாக்காளர்களுக்கு இடையூறு செய்தல், அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் இடையூறு செய்தல் உள்பட 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.