
அறிவியல் புனைவு படங்களிலும் கதைகளிலும் வருகிற பறக்கக்கூடிய வாகனங்கள் நடைமுறைக்கு வருவது இன்னும் பத்தாண்டுகள் தொலைவில் அல்ல என்பதை ஆனந்த் மஹிந்திராவின் எக்ஸ் வலைத்தள பதிவு உணர்த்தியுள்ளது.
2025-ல் அறிமுகமாகும் என அவர் குறிப்பிடுகிற மின்சாரத்தில் இயங்கக் கூடிய பறக்கும் டாக்ஸிகளின் உருவாக்கத்தில் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம், ஐஐடி மெட்ராஸ் உடன் இணைந்து ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறது.
இதன் ஆரம்ப நிலை வடிவமைப்பை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ஆனந்த் மஹிந்திரா.
ஒருமுறை சார்ஜ் செய்தால் 200 கிமீ தொலைவு வரை செல்லக்கூடிய இந்த இ-பிளேனில் இருவர் பயணிக்கலாம். 200 கிலோகிராம் வரை எடை தாங்கும். மனிதர்கள் ஓட்டக்கூடியதாகவும் செங்குத்தாக வானில் புறப்படுவதும் தரையிறங்குவது போலவும் வடிவமைக்கப்படவுள்ளது.
இதன் கட்டணம், தற்போது கார் டாக்ஸிக்கு செலுத்தும் கட்டணத்தை விட இரு மடங்காக இருக்கலாம்.
வானில் பறக்கும் டாக்ஸிகள் குறித்த நடைமுறை, அவற்றுக்கான உள்கட்டமைப்பு வளர்ச்சிகள் ஆகியவை பாதுகாப்பு மற்றும் நேர்த்தியான செயல்பாட்டுக்கு ஏற்றாற்போல உருவாக்கப்பட வேண்டியவை.
அடுத்த ஆண்டு சாத்தியமாகுமா என்பது தெரியவில்லையெனினும் இன்னும் சில ஆண்டுகளில் பறக்கிற டாக்ஸிகள் வந்துவிடுவது உறுதி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.