ரேபரேலியில் உள்ளூர்க் கடையில் தாடியை 'டிரிம்' செய்துகொண்ட ராகுல் காந்தி!
ரேபரேலியில் உள்ளூர்க் கடையில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தனது தாடியை ‘டிரிம்’ செய்து கொள்ளும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
மக்களவைத் தோ்தலின் 5-ஆம் கட்டம் மே 20-ஆம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் ராகுல் காந்தி போட்டியிடும் உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதிக்கும் வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
ரேபரேலியில் போட்டியிட தனது வேட்புமனுவை கடைசி நாளில் தாக்கல் செய்த ராகுல் காந்தி, அந்த தொகுதியில் தனது முதல் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு திங்கள்கிழமை பேசினார்.
அப்போது, “எனது குடும்பத்துக்கு ரேபரேலி மக்களுடன் ஆழமான தொடா்புள்ளது. இதனால் நான் ரேபரேலியில் போட்டியிடுகிறேன். எனது குடும்பம் ரேபரேலி மக்களுக்காக எப்போதும் உழைத்து வந்துள்ளது. ஆனால் தொழிலதிபா்கள் அம்பானிக்காகவும், அதானிக்காகவும் பிரதமா் மோடி உழைக்கிறாா்.” என்று ராகுல் காந்தி பேசியிருந்தார்.
இந்தப் பிரசாரத்தில் கூட்டத்தில் இருந்து ஒருவா் ராகுலின் திருமணம் எப்போது நடைபெறும் என்று கேள்வி எழுப்பினாா். அதற்கு ராகுல், ‘விரைவில் திருமணம் செய்துகொள்வேன்’ என்று பதிலளித்தாா்.
இதனைத் தொடர்ந்து, ரேபரேலியில் உள்ள உள்ளூர் சலூன் கடையில் நேற்று மாலை காரை நிறுத்திய ராகுல் காந்தி தனது தாடியை ‘டிரிம்’ செய்து கொண்டார்.
இந்த புகைப்படங்களை பகிரும் காங்கிரஸ் ஆதரவாளர்கள், இவரின் எளிமை ஈடு இணையற்றது எனப் புகழ்ந்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.