
நர்மதா (குஜராத்): குஜராத் மாநிலம், பொய்ச்சா பகுதியில் நர்மதை நதியில் குளித்த சிறுவர்கள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் திடீரென ஏற்பட்ட பலத்த நீரேட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்ததாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
தற்போது, தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் வதோதரா தீயணைப்பு வீரர்கள் உடல்களை தேடும் பணியைத் தொடங்கியுள்ளனர்.
பொய்ச்சா நர்மதா நதி பிரபலமான கோடைகால சுற்றுலாப் பகுதியாகும். இங்கு வரும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் நதியில் குளிப்பது படகு சவாரி செய்து வந்தனர்.
இதையடுத்து நர்மதை மாவட்ட நிர்வாகம் சமீபத்தில் உள்ளூர் படகு உரிமையாளர்கள் உரிமம் இல்லாமல் நதியில் படகுகளை இயக்க தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
அதே நேரத்தில், வதோதரா மாவட்ட நதியின் ஓரத்தில் படகு ஓட்டுநர்கள் தொடர்ந்து படகுகளை இயக்கி வருகின்றனர்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை சூரத்தில் இருந்து வந்த ஒரு சுற்றுலா குழுவினர் வதோதரா மற்றும் நர்மதை மாவட்டங்களின் எல்லையில் உள்ள பொய்ச்சா நர்மாதை நதியில் குளித்துள்ளனர்.
அப்போது திடீரென ஏற்பட்ட பலத்த நீரோட்டத்தில் சிறுவர்கள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர் என்றனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்து விரைந்து வந்த அதிகாரிகள் காணாமல் போன ஏழு பேரைத் தேடும் பணியைத் தொடங்கினர்.
தற்போது, தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் வதோதரா தீயணைப்பு வீரர்கள் உடல்களை தேடுக்கும் பணியைத் தொடங்கியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.