
நெரிசல் மிக்க ஹெளரா ரயில் நிலையத்தில் பகல் நேரத்தில் ஒருவர், பெண்ணைக் கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் புதன்கிழமை நடந்துள்ளது.
கத்தியால் குத்தப்பட்ட பெண் ரிவு பிஸ்வாஸ், ஹெளரா மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். ஆனால் முன்னரே அவர் இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
முங்கேஷ் யாதவ் என்பவர் ரிவு பிஸ்வாஸை கத்தியால் குத்திய பின்னர் ரயில் நிலையத்தில் இருந்த காவலர் மற்றும் பயணிகளையும் தாக்க முயன்றார். பின்னர் அவர் பிடிக்கப்பட்டு காவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இறந்து போன பெண் மற்றும் அவரது கணவர் பிந்து பிஸ்வாஸ் இருவருக்கும் முங்கேஷ் நன்கு அறிமுகமானவர். மூவரும் ரயில் நிலையத்துக்கு ஒன்றாக வந்துள்ளனர். முங்கேஷும் பிந்துவும் ஒரே அலுவலகத்தில் வேலை பார்த்து வருகின்றனர்.
தனக்கு மருந்து வாங்கி வருமாறு பிந்துவை அனுப்பிய பிறகு தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரிவு பிஸ்வாஸைக் குத்தியுள்ளார், முங்கேஷ்.
இது தொடர்பாக காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.