ஸ்லோவாகியா பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு: மோடி கண்டனம்

கோழைத்தனமான மற்றும் கொடூர செயலை வன்மையாக கண்டிப்பதாக மோடி பதிவு.
ஸ்லோவாகியா பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு: மோடி கண்டனம்

ஸ்லோவாகியா நாட்டின் பிரதமர் ராபர்ட் ஃபிகோ மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

பிரதமர் ராபர்ட் ஃபிகோ, புதன்கிழமையன்று அரசாங்கக் கூட்டத்திற்குப் பிறகு பொதுமக்களுடன் உரையாடியபோது, அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்தார்.

மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் ராபர்ட் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், இந்த சம்பவத்துக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஸ்லோவாகியா பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு: மோடி கண்டனம்
செங்கல்பட்டு: அடுத்தடுத்து வாகனங்கள் மோதியதில் 4 பேர் பலி; 20 பேர் படுகாயம்!

பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

“ராபர்ட் ஃபிகோ மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் மிகவும் கண்டனத்துக்குரியது. இந்த கோழைத்தனமான மற்றும் கொடூர செயலை வன்மையாக கண்டிக்கிறேன். ராபர்ட் விரைவில் உடல்நலம் பெற வாழ்த்துகிறேன். ஸ்லோவாகியா நாட்டு மக்களுக்கு உறுதுணையாக இந்தியா இருக்கும்.” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com