குற்றவாளிகளை அமலாக்கத் துறை கைது செய்ய உச்ச நீதிமன்றம் நிபந்தனை

குற்றவாளிகளை அமலாக்கத் துறை கைது செய்ய உச்ச நீதிமன்றம் நிபந்தனை
அமலாக்கத் துறை
அமலாக்கத் துறை
Published on
Updated on
1 min read

புது தில்லி: பண மோசடி தடுப்புச் சட்டப் பிரிவு 19ன் கீழ் குற்றவாளிகளை கைது செய்யும் அமலாக்கத் துறை கைது செய்வதற்கு புதிய நிபந்தனையை உச்ச நீதிமன்றம் விதித்துள்ளது.

அமலாக்கத் துறை அனுப்பும் நோட்டீஸை ஏற்று, குற்றம்சாட்டப்பட்டவர் விசாரணைக்கு ஆஜராகும்போது அவரை கைது செய்வதென்றால், சிறப்பு நீதிமன்றத்திடம் அனுமதி பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஒரு பணமோசடி தடுப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட பிறகு, அமலாக்கத் துறை மற்றும் அதன் அதிகாரிகள் பணமோசடி தடுப்புச் சட்டப்பிரிவு 19-ன் கீழ் ஒருவரை கைது செய்வதற்கான அதிகாரத்தை இழந்துவிடுகிறார்கள் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

அமலாக்கத் துறை
நாள்தோறும் 10,000 நடை என்பது கட்டுக்கதையா?

பணமோசடி தடுப்புச் சட்டப்பிரிவு 19 ஆனது, ஒருவரது இருப்பிடத்திலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட உடைமைகள், எழுத்துப் பூர்வமாகக் கிடைத்த நம்பத்தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில்தான் ஒருவர் குற்றவாளி என தெரியவந்தால் அவரை கைது வழிவகுக்கும்.

அதுபோல மிகவும் முக்கியமாக, விசாரணை அமைப்பு, கைதுசெய்யப்படுவது குறித்து உடனுக்குடன் அந்த நபருக்குத் தெரியப்படுத்த வேண்டியது கைது செய்வதற்கான அடிப்படைப் பணியாகும்.

ஒரு புகார் குறித்து வழக்குப் பதிவு செய்யப்படும்வரை, குற்றம்சாட்டப்பட்டவர் கைது செய்யப்படவில்லை என்றால், வழக்குப் பதிவு செய்யப்பட்டபிறகு அவரை கைது செய்யக்கூடாது. ஒருவர் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி, அவரும் மிகச் சரியான விசாரணை ஆணையம் முன்பு ஆஜரானால், அது காவலில் எடுப்பதாகாது.

ஒரு தனிநபருக்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு உள்படுத்தப்பட்டுவிட்டால், அவரை கைது செய்ய சிறப்பு நீதிமன்றத்தின் அனுமதியை விசாரணை அமைப்பு பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி அபைய் எஸ் ஓகா மற்றும் நீதிபதி உஜ்ஜல் பயன் ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்துள்ளது. விசாரணையில், கைது நடவடிக்கை அவசியம் என்று நீதிமன்றம் கருதினால் மட்டுமே கைதுக்கு அனுமதி வழங்க வேண்டும்.

முதற்கட்டமாக, சட்டப்பிரிவு 70ன் கீழ், சம்மனுக்கு, குற்றம்சாட்டப்பட்டவர் ஆஜராக மறுக்கும்பட்சத்தில்தான் கைதுக்கு அனுமதிக்க முடியும். அதுவும் பிணையுடன் கூடிய கைது ஆணையாகவே இருக்க முடியும்.

குற்றம்சாட்டப்பட்டவருக்கு விதிவிலக்கு இல்லாமல் எழுத்துப்பூர்வமாக, கைது செய்யப்படுவதற்கான காரணங்களை அமலாக்கத் துறை கைது செய்யப்படுபவருக்கு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகு இந்த சிறப்பு மிக்கத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com