ஸ்ரீநகரில் பல்வேறு சமூக பிரதிநிதிகளுடன் அமித் ஷா சந்திப்பு
ஸ்ரீநகர்: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது இரண்டு நாள் காஷ்மீர் பயணத்தின் போது, ஸ்ரீநகரில் வியாழக்கிழமை மாலை குஜ்ஜார், பகர்வால், பஹாடி மற்றும் சீக்கிய சமூகத்தை சேர்ந்த பிரதிநிதிகளை சந்தித்து பேசினர்.
இது குறித்து பஹாடி சமூக பிரதிநிதி முகமது அக்பர் கான் செய்தியாளர்களிடம் கூறுகையில், "எங்களை எஸ்டி பிரிவில் சேர்த்ததற்காக குஜ்ஜார், சீக்கியர் மற்றும் பஹாடி பிரதிநிதிகள் ஒரு குடும்பமாக அமித் ஷாவை சந்தித்து நன்றி தெரிவிப்பதற்காக இங்கு வந்தோம். உள்துறை அமைச்சரோ, பாஜகவோ என்ன வாக்குறுதி அளித்தாலும், 100 சதவீதம் நிறைவேற்றுகிறது," என்று கூறினார்.
ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர், பாரமுல்லா மற்றும் அனந்த்நாக் ஆகிய மூன்று மக்களவைத் தொகுதிகளிலும் பாஜக போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய மாநாடு மற்றும் மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகிய இரண்டு முக்கிய பிராந்தியக் கட்சிகளுக்கு இடையே தேர்தல் போர் நீடிக்கிறது.
2019 மக்களவைத் தேர்தலில், ஜம்மு காஷ்மீரில் பாஜக வேட்பாளர்கள் ஆறு பேர் களத்தில் இருந்தனர், ஆனால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை.
உதம்பூர் மற்றும் ஜம்மு தொகுதிகளுக்கு முறையே ஏப்ரல் 19 மற்றும் 26 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், ஸ்ரீநகரில் மே 13 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.
பாரமுல்லா தொகுதிக்கு மே 20-ஆம் தேதியும், அனந்த்நாக்-ராஜோரி தொகுதிக்கு மே 25-ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.