தேவ கௌடாவுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து!

மதச்சார்பற்ற ஜனதாதளக் கட்சியின் தலைவர் தேவ கௌடாவுக்கு, தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி.
பிறந்தநாள் வாழ்த்து
பிறந்தநாள் வாழ்த்து
Published on
Updated on
1 min read

மதச்சார்பற்ற ஜனதாதளக் கட்சியின் தலைவர் தேவ கௌடாவுக்கு, தனது எக்ஸ்தளப் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி.

கர்நாடகத்தில், மே 18,1933-இல் பிறந்த தேவகௌடாவின் முழுப்பெயர் ஹரதனஹல்லி தொட்டெகௌடா தேவகௌடா என்பதே. இன்று (மே 18) இவரது 90-ஆவது பிறந்தநாளினை வாழ்த்தும் விதமாக பிரதமர் மோடி, தனது எக்ஸ்தளப் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தேவ கௌடா, 1975-ஆம் காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சியினை எதிர்த்து, ஜெயபிரகாஷ் நாராயணன் உருவாக்கிய ஜனதா கட்சியில் இணைந்து படிப்படியாக முன்னேறினார். காங்கிரசில் இருந்து வெளியேறிய அமைச்சர்களில் ‌ஒருவரான வி.பி. சிங் ஆரம்பித்த ஜனதா தளம் கட்சியை உருவாக்கப் பெரும்பங்காற்றிய இவர், 1999-இல் வி.பி. சிங் ஜனதா தளக் கட்சியை முடக்கம் செய்துகொண்டதால், மதச்சார்பற்ற ஜனதாதள கட்சியை உருவாக்கி, அதன் தலைவராக உள்ளார்.

தேவ கௌடா இந்தியாவின் 11வது பிரதமராகவும், கர்நாடகத்தின் 14வது முதலமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com