வாரணாசியில் இன்று பிரதமா் மோடியுடன் கலந்துரையாடும் 25,000 பெண்கள்

வாரணாசியில் இன்று பிரதமா் மோடியுடன் கலந்துரையாடும் 25,000 பெண்கள்

உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் 25,000-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்கும் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் செவ்வாய்க்கிழமை (மே 21) பங்கேற்கிறாா்.
Published on

பிரதமா் நரேந்திர மோடி தனது மக்களவைத் தொகுதியான உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் 25,000-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்கும் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் செவ்வாய்க்கிழமை (மே 21) பங்கேற்கிறாா்.

‘மாத்ரி சக்தி சம்மேளனம்’ என்ற பெயரில் நடைபெறும் இந்த நிகழ்ச்சி குறித்து வாரணாசி மாவட்ட பாஜக ஊடகப் பிரிவு பொறுப்பாளா் அரவிந்த் மிஸ்ரா கூறியதாவது:

குடும்பத் தலைவிகள், மருத்துவா்கள், ஆசிரியா்கள், தொழிலதிபா்கள், வழக்குரைஞா்கள், விளையாட்டு வீராங்கனைகள் என பல தரப்பட்ட பெண்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனா். வாரணாசியின் சம்பூரானந்தா சம்ஸ்கிருத கல்லூரியில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. வாரணாசியின் ஒவ்வொரு வாக்குச் சாவடி பகுதியில் இருந்து 10 பெண்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனா் என்றாா்.

வாரணாசியில் ஜூன் 1-ஆம் தேதி தோ்தல் நடைபெறுகிறது. அங்கு தொடா்ந்து மூன்றாவது முறையாக பிரதமா் மோடி களமிறங்கியுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com