பாரமுல்லாவில் 35 ஆண்டுகளில் இல்லாத வாக்குப்பதிவு!

கடந்த 1989ஆம் ஆண்டு முதல் அதிக எண்ணிக்கையிலான வாக்குப்பதிவு இது.
பாரமுல்லாவில் 35 ஆண்டுகளில் இல்லாத வாக்குப்பதிவு!

ஜம்மு - காஷ்மீரின் பாரமுல்லா தொகுதியில் 56 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக அம்மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி பி.கே. போல் தெரிவித்தார்.

கடந்த 1989ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற தேர்தல்களில் அதிக எண்ணிக்கையிலான வாக்குப்பதிவு இது எனவும் அவர் தெரிவித்தார்.

ஜம்மு - கஷ்மீரிலுள்ள பாரமுல்லா மக்களவைத் தொகுதி,18 சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கியது. பாரமுல்லா, குப்வாரா, பந்திபோரா, புத்கம் ஆகிய மாவட்டங்களில் இந்தத் தொகுதி பரந்து விரிந்துள்ளது. ஷியா முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் இப்பகுதியில் வசிக்கின்றனர்.

ஐந்தாம் கட்டத் தேர்தலையொட்டி, இத்தொகுதியில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இரவு 8 மணி வரை 56.02 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி பி.கே. போல் தெரிவித்தார். 1989ஆம் ஆண்டு முதல் 35 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிக எண்ணிக்கையில் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாகக் குறிப்பிட்டார்.

பாரமுல்லாவில் 35 ஆண்டுகளில் இல்லாத வாக்குப்பதிவு!
தாமதமானாலும் வாக்கு செலுத்தாமல் வீடு திரும்பாதீர்கள்: உத்தவ் தாக்கரே கோரிக்கை

தேர்தல் ஆணையத்தில் அதிராகப்பூர்வ செயலியான வோட்டர் டேர்ன்அவுட்-டிலும் இந்த சதவிகிதம் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 37 சதவிகித வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தன.

ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கியதால், மக்கள் அடைந்த கோபத்தின் எதிரொலிதான் இந்த அதிகப்படியான வாக்குப்பதிவு என முன்னாள் முதல்வரும் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com