
பிரதமர் மோடி பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த நேர்காணலில்,ஒரே நாடு ஒரே தேர்தல் முறை,பொது சிவில் சட்டம் போன்றவற்றை மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அமல்படுத்துவேன் என்றும் தேர்தல் அறிக்கையில் உள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் பேசியதாவது :
மக்களவைத் தேர்தல் அறிவிப்புக்கு முன்,ஆட்சி அமைத்தவுடன் என்ன திட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்பதற்காக அனைத்து அமைச்சகங்களிடமும் 100 நாள் திட்டத்தை வகுக்க சொன்னேன்.அதில் கூடுதலாக 25 நாள்களை சேர்த்துள்ளேன். இளைஞர்களிடம் நாட்டு மக்களிடமும் கருத்துகளை கேட்டு ஆட்சிக்கு வந்தவுடன் முதலில் என்ன செய்ய வேண்டும், நாட்டை எப்படி வளர்க்க வேண்டும் போன்ற அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற நான் இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் முறை ,பொது சிவில் சட்டம் போன்றவை இந்த 100 நாள் திட்டத்தில் வருமா என்ற கேள்விக்கு,இது பாஜகவின் தேர்தல் அறிக்கையில் உள்ளது என்றும் ஆனால் ஒன்றை மட்டும் சொல்வேன்,இதற்கு நீங்கள் எங்களை பாராட்டுவீர்கள் என்று சொன்னார். நீங்கள் என்னை கவனித்திருந்தீர்கள் என்றால் தெரியும் இந்த 100 நாள் திட்டம் என்பது புதுசு அல்ல.நான் குஜராத் முதலமைச்சராக இருந்த போதிலிருந்து இதைச் செய்து வருகிறேன்.2014 மற்றும் 2019 ஆண்டுகளில் எனக்கு இந்த திட்டம் மனதில் இருந்தது ஆனால் அதற்குள் நாங்கள் செயலில் இறங்கிவிட்டோம்.
2019 ல் எங்கள் 100 நாள் திட்டம் என்பது சரத்து 370 ரத்து செய்தது, முத்தலாக் தடை சட்டம் நிறைவேற்றியது போன்றவற்றை செய்தோம்.ஆனால் இந்த முறை நாங்கள் முன்கூட்டியே 100 நாள் திட்டதை வகுத்துள்ளோம். ஜுன் 4 - ந் தேதிக்கு பிறகு தொடங்கும் இந்த திட்டம் சரியான நேரத்தில் தாக்கத்தை எற்படுத்தக்கூடிய திட்டமாகும்.நாங்கள் நேரத்தை வீணடிக்காமல் நேரடியாக செயலில் இறங்க போகிறோம். எங்கள் அரசு இந்த வேகத்தில் தான் செயல்படுகிறது.நாங்கள் முன்னோக்கு சிந்தனையையும் சரியான திட்டமிடலையும் நம்புகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.