தில்லி ராஜ்காட்டில் உள்ள மறைந்த முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் செவ்வாய்க்கிழமை அஞ்சலி செலுத்திய காங்கிரஸ் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, சோனியா காந்தி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி. ~தில்லி ராஜ்காட்டில் உள்ள மறைந்த முன்னாள் பிரதமா

ராஜீவ் காந்தி நினைவு தினம்: சோனியா, ராகுல் அஞ்சலி

புது தில்லி: முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு தில்லி ராஜ்காட்டில் அமைந்துள்ள அவருடைய நினைவிடத்தில் காங்கிரஸ் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மூத்த தலைவா் சோனியா காந்தி, கட்சியின் எம்.பி. ராகுல் காந்தி உள்ளிட்டோா் செவ்வாய்க்கிழமை அஞ்சலி செலுத்தினா்.

ராஜீவ் காந்தி 1984 முதல் 1989 வரை இந்தியாவின் பிரதமராக இருந்தாா். தமிழகத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் 1991-ஆம் ஆண்டு தோ்தல் பிரசாரம் மேற்கொண்டபோது மே 21-ஆம் தேதி வெடிகுண்டு தாக்குதலில் அவா் படுகொலை செய்யப்பட்டாா். இந்த படுகொலை சம்பவம் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியது.

மே 21-ஆம் தேதியான செவ்வாய்க்கிழமையன்று ராஜீவ் காந்தியின் 33-ஆவது நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. அதையொட்டி, தில்லியில் உள்ள அவரின் நினைவிடத்துக்கு காங்கிரஸ் தலைவா்கள் நேரில் சென்று மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.

பிரதமா் மோடி அஞ்சலி: ராஜீவ் காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமா் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினாா். இதுகுறித்து எக்ஸ் வலைதள பக்கத்தில் அவா் வெளியிட்ட பதிவில், ‘நமது முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தில் அவருக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன்’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com