தில்லி மக்களை முட்டாளாக்க முடியாது: அதிஷி

ஹரியாணா அரசு மூலம் தேசிய தலைநகருக்கு தண்ணீர் விநியோகத்தை நிறுத்தியுள்ளது.
தில்லி மக்களை முட்டாளாக்க முடியாது: அதிஷி
Published on
Updated on
1 min read

ஆம் ஆத்மியை குறிவைக்க பாஜக புதிய சதி செய்துள்ளதாகவும், ஹரியாணா அரசு மூலம் தேசிய தலைநகருக்கு தண்ணீர் விநியோகத்தை நிறுத்தியுள்ளதாக தில்லி அமைச்சரவை அமைச்சர் அதிஷி குற்றம் சாட்டியுள்ளார்.

செய்தியாளர் சந்திப்பில் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி, மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்தே ஆம் ஆத்மி கட்சியைக் குறிவைக்க பாஜக சதி செய்து வருகிறது.

மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட 5 நாள்களுக்குள், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கைது செய்யப்பட்டார். அதனால் ஆம் ஆத்மி கட்சி தேர்தலில் பிரசாரம் செய்ய முடியாது என்று நினைத்தார்.

தில்லி மக்களை முட்டாளாக்க முடியாது: அதிஷி
தங்க கருட வாகனத்தில் எழுந்தருளிய வரதராஜ பெருமாள்!

கேஜரிவால் இடைக்கால ஜாமீனில் வெளியே வந்தபிறகு, கட்சியின் மக்களவை எம்.பி.யான சுவாதி மாலிவாலைப் பயன்படுத்தி குற்றம் சாட்டினார்கள், ஆனால் அந்த திட்டமும் பலனளிக்கவில்லை.

பின்னர், கட்சிக்கு வெளிநாட்டு நிதியுதவி கிடைத்துள்ளதாகப் பழைய பிரச்னையை எழுப்பினார். தற்போது ஹரியாணா அரசு மூலம், தில்லிக்கு யமுனை நீர் வழங்குவதை பாஜக நிறுத்தியுள்ளது. இதற்கு முன்னதாக தண்ணீர் பிரச்னைகள் எழாத பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை குறித்த புகார்கள் வரத்தொடங்கிய நிலையில், இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக அவர் கூறினார்.

இதுதொடர்பாக ஹரியாணா அரசுக்குக் கடிதம் எழுதுவோம். அவர்கள் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால், உச்சநீதிமன்றத்தில் அவசர மனுவாக அனுப்பப்படும்.

தில்லி மக்களை முட்டாளாக்க முடியாது: அதிஷி
சென்னை உயா்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி அரங்க. மகாதேவன்

யமுனாவின் நீர்மட்டம் பெரும்பாலும் வஜிராபாத்தில் 674 அடியாகவே உள்ளது. மே 14 மற்றும் 15ஆம் தேதிகளில் 671.9 அடியாகவும், மே 16ல் 671.3 அடியாகவும், பின்னர் அடுத்த மூன்று நாள்களில் 671 அடியாகக் குறைந்தது என்றார்.

ஆம் ஆத்மி அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவும், தலைநகரில் தண்ணீர் நெருக்கடியை ஏற்படுத்துகிறது பாஜக. வாக்காளர்களைக் கையாளவும் பாஜக செய்யும் தந்திரம் பலிக்காது. தில்லி மக்களை முட்டாளாக்க முடியாது என்பதை பாஜகவிடம் தெரிவித்துக்கொள்கிறேன் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com