
ஈரான் அதிபர் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக அந்நாட்டு தலைநகர் தெஹ்ரானுக்கு இந்திய குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் புதன்கிழமை புறப்பட்டுச் சென்றார்.
ஈரான் அதிபா் இப்ராஹிம் ரய்சி, அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் ஹுசைன் அமிா் அப்துல்லாஹியன் உள்ளிட்டோா் ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்தனா். ரய்சியின் உடல் அஞ்சலிக்காக வியாழக்கிழமை வரை வைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் ஈரானில் ரய்சி பிறந்த இடமான மஷாத்தில் அவரின் உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது என்று அந்நாட்டு அரசு ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியா சார்பில் ஈரான் அதிபரின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக தில்லியில் இருந்து புதன்கிழமை காலை குடியரசு துணைத் தலைவர் புறப்பட்டுச் சென்றதாக வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
முன்னதாக நேற்று தில்லியில் உள்ள ஈரான் தூதரகத்துக்குச் சென்ற வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கா், ரய்சி மற்றும் ஹுசைனின் மறைவுக்கு இந்தியா சாா்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.