பிபவ் என்னை 7-8 முறை அறைந்தார்: சுவாதி மாலிவால்

சம்பவத்தன்று, கேஜரிவால் வீட்டில், பிபவ் என்னை 7-8 முறை அறைந்தார் என்று சுவாதி மாலிவால் புகார்
பிபவ் என்னை 7-8 முறை அறைந்தார்: சுவாதி மாலிவால்
ANI
Published on
Updated on
1 min read

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வீட்டில் இருந்தபோதே, அவரது தனி உதவியாளர் பிபவ் குமார், தன்னை 7 - 8 முறை அறைந்தார் என்று ஆம் ஆத்மி எம்.பி. சுவாதி மாலிவால் தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்த சம்பவம் நடந்தபோது தான் வீட்டில் இருக்கவில்லை என்று ஆம் ஆத்மி தலைவரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் விளக்கம் கொடுத்துள்ளார்.

ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு சுவாதி மாலிவால் அளித்த நேர்காணலில், மே 13ஆம் தேதி காலை 9 மணிக்கு நான் அரவிந்த் கெஜரிவால் வீட்டுக்குச் சென்றிருந்தேன். என்னை விருந்தினர் அறையில் தங்க வைத்த ஊழியர்கள், முதல்வர் வந்து சந்திப்பார் என்று கூறிச் சென்றனர். அப்போது அங்கே வந்த பிபவ் குமார் என்னை அடிக்கத் தொடங்கினார். என்னை அவர் 7-8 முறை அறைந்தார். நான் அவரை தள்ள முயன்றபோது, அவர் என் காலை இழுத்து என்னை கீழே தள்ளினார். அப்போது, அங்கிருந்த மேஜை மீது எனது தலை இடித்துக்கொண்டது, பிறகு தரையில் விழுந்தேன், அப்போது அவர் என்னை உதைத்தார், நான் உதவிக்காக குரல்கொடுத்தேன். ஆனால் யாருமே வரவில்லை என்று சுவாதி மாலிவால் கூறியுள்ளார்.

நான் காவல்துறையிடம் செல்வேன் என்று சொன்னேன், அதற்கு பிபவ், என்ன வேண்டுமானாலும் செய்துகொள் என்று பதிலளித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நான் உடனடியாக காவல்துறையை அழைத்தேன், அதைப் பார்த்த பிபவ் வெளியே சென்று பாதுகாவலர்களை அழைத்தார், அவர்கள் என்னை வெளியே அனுப்பினர். அந்த விடியோதான் வெளியாகியிருக்கிறது, ஆதாரங்களை அவர்கள் அழித்துவிட்டனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com