
மகாராஷ்டிர மாநிலம் புணேவில் உள்ள உஜானி அணையில் படகு கவிழ்ந்த விபத்தில், இதுவரை 5 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை மாலை ஏற்பட்ட படகு விபத்தில் ஒரு பெண், இரண்டு குழந்தைகள் உள்பட 6 பேர் நீரில் மூழ்கி மாயமாகினர்.
அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த பேரிடர் மீட்புப் படையினர் இதுவரை 5 பேரை உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்டுள்ளனர்.
மேலும், காணாமான ஒருவரின் உடலை தேடும் பணியை தொடர்ந்து வருகின்றனர்.
விபத்து நடந்தது எப்படி?
புணே நகரில் இருந்து 140 கி.மீ. தொலைவில் உள்ள உஜானி அணைப் பகுதியில் கலாஷி மற்றும் பூகாவ் கிராமங்களுக்கு இடையே படகு சேவை இயக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், கனமழை மற்றும் பலத்த காற்றுக்கு மத்தியில் நேற்று மாலையும் படகு தொடர்ந்து இயக்கப்பட்ட நிலையில், கலாஷி கிராமம் அருகே கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.